முக்கியச் செய்திகள் இந்தியா

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது – மத்திய அரசு

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக நாடு திரும்பிவிட்டனர். உக்ரைன் போரால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வந்தனர். அவர்கள் இந்தியாவில் தங்கள் மருத்துவ படிப்புகளில் தொடர அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பதில் அளித்த மத்திய அரசு, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது என்றும் இதற்கு தேசிய மருத்துவ ஆணையச்சட்டப்படி அனுமதி இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

மேலும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாத, உயர்கல்விக்கான அணுகல் உள்ள மாணவர்கள் மட்டுமே மேலைநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர். குறைவான தகுதி கொண்ட மாணவர்களை நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிப்பது பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற வாய்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

எனவே, இந்த விதிமுறையில் தளர்வு கொண்டு வருவது நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதிலால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் மருத்துவப்படிப்பு கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்

Niruban Chakkaaravarthi

”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”

Halley Karthik

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை

EZHILARASAN D