சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நோயாளிகள் உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
ஏசியில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகவும், விரைவாக தீ அணைக்கபட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா








