அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை அடித்து உதைப்பேன் என பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தற்போது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக போடிநாயகனூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி., செந்தில் பாலாஜியை அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







