முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குதிரை உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்குப் பதிவு

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்ததை அடுத்து மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்கியின் பிரமாண்டமான ’பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக்கி வரு கிறார். இதில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா காரணமாக தடைபட்டிருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது பரபரப்பாக நடந்து வரு கிறது.

ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து படத்தின் காட்சிகள் படமாகி வருகின்றன. அரசர் கால கதை என்பதால் ஏராளமான குதிரைகளும் இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 80 குதிரைகள் படப்பிடிப்பில் பயன்படுத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த விபத் தில் குதிரை ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து ஐதராபாத் அப்துல்லாபுர் பேட் போலீ சார் மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளரான மணிரத்னம் மீதும் குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விலங்குகள் நல வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தெலங்கானா விலங்குகள் நல வாரியத்துக்கும் கடிதம் எழுதி யுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடியூரப்பாவிற்கு கடிதம்

Ezhilarasan

சென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசி

Ezhilarasan

தமிழகத்துக்கு ரூ.286.91 கோடி பேரிடர் நிதிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

Niruban Chakkaaravarthi