அமெரிக்காவில் இடா புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இடா புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக ஐடா கருதப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் இப்போது அனுபவித்து வருகிறது. கடும் வெள்ளத்தால் நகர சாலைகள் பயங்கர நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் சுரங்க ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி காரணமாக இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








