போலி பத்திரப் பதிவுகளை பதிவுத்துறைத் தலைவரே நேரடியாக ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சட்டசபை முடிந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர் கூறும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரம் தயாரிப்பு போன்ற ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போலிப் பத்திரம் தயாரிப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இதுவரை புதிதாக சொத்துக்கள் வாங்கியவர்கள், சொத்துக்களை விட்டு வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டத்தை தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த புதிய சட்டம் இரண்டு மூன்று மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.