பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார். காஞ்சிபுரம் அருகே, பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 9  உயிரிழந்தனர்.…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே, பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 9  உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் மூன்று லட்சமும் , மத்திய அரசு சார்பில் ரூபாய் இரண்டு
லட்சமும் வழங்குவதாகவும், படு காயமுற்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் முன்னிலையில் உயிரிழந்தவர்களின் எட்டு குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலை வழங்க பட்டது.

அப்போது, உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த சில மாணவிகளுக்கு கல்வி உதவியும்,
கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சிலர் குடும்பத்தின் வறுமை
சூழ்நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.  கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் பேசி முடிவெடுப்பதாக மாவட்ட ஆட்சியர்
தெரிவித்ததாக கூறப்படுகிறது.

— ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.