எம்பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்!

பிரதமர் மோடி பெயரை அவமதித்ததாக தொடகப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி…

பிரதமர் மோடி பெயரை அவமதித்ததாக தொடகப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் வெளியிட்டுள்ள  அறிவிக்கையில், பிரதமர் மோடியின் பெயரை அவமதித்த வழக்கில் சூரத் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், அரசியல் சாசன பிரிவு 102 [1] [e]இன் படியும் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.