தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.…

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் முதல் முறையாக, எலக்ட்ரானிக் வடிவிலான இ- பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார். தாக்கல் செய்யப்படுவது இ- பட்ஜெட் என்பதால், நிதி அமைச்சர் வாசிக்கும்போது, அந்த வார்த்தைகள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரையில் ஓடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர். அவர்களை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். பின்னர்  அவர்கள் வெளி நடப்பு செய்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.