ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை கெஹனா வசிஸ்த்தின் முன்ஜாமீன் மனுவை, செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, வாய்ப்பு தேடும் நடிகைகளை வெப்சீரிஸில் நடிக்க வைப்பதாகக் கூறி ஆபாச படம் எடுத்து, செல்போன் செயலி மூலம் வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் கூட்டாளியான ரியான் தோர்பே உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை கெஹனா, தன்னையும் கைது செய்வார்களோ என்று அச்சத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சோனாலி அகர்வால், ‘நடிகையின் மீது முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தீவிர தன்மையுடையவை. பாதிக்கப்பட்ட பெண் களை பாலியல் காட்சிகளில் நடிக்குமாறு இவர் கட்டாயப்படுத்தி உள்ளார். அதனால் இடைக்கால ஜாமீன் வழங்க பொருத்தமான வழக்கு அல்ல’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் நடிகை கெஹனா, மும்பை உயர் நீதிமத்தின் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகை கெஹனா வசிஸ்த், தமிழில் ’பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி யுள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.