முக்கியச் செய்திகள் தமிழகம்

நிதிநிலை சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை சட்டமுன் வடிவை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டமுன் வடிவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார். அப்போது நிதிக் குழுவானது, மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன்களுக்கான வரம்பினை, 2021ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை 4 விழுக்காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காடாக பரிந்துரைத்துள்ளது எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். நிதிநிலை பற்றாக்குறையின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு வரை குறைப்பதற்கான வரம்பினை 2024ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் ஷெனாய் இசை!

G SaravanaKumar

மதுரையில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி திருவிழா!

Yuthi

’வெற்றிடத்தை இபிஎஸ் நிரப்பி இருக்கிறார்’ – வைகைச் செல்வன்

EZHILARASAN D