கண்ணாடிக்கான சண்டையில் நண்பர்கள் தாக்குதல் சாலை விபத்தில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி வேலை செய்து அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் மற்றும் சக்திவேல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது நண்பர் நாகேஷ் லே அவுட் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்ததாக அவரது நண்பர்கள் சக்திவேலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேல் சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்துபோன சக்திவேல் அவரது நண்பர்கள் சேகர்,வரதராஜன், கரடி நாகராஜ், சதீஸ் குமார் ஆகிய 5 பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது சக்திவேல் அணிந்திருந்த கூலிங் கிளாசை சேகர், வரதராஜ் ஆகிய இருவரும் கேட்டு உள்ளனர். அதை சக்திவேல் தர மறுத்ததால் கோபமடைந்த இருவரும் சக்திவேலை பலமாக தாக்கியதில் காயமடைந்தவரை சாலை விபத்து என கூறி மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்தது. கரடி நாகராஜ், சதீஸ் குமார் இருவரும் போலீசில் நடந்ததை கூறி சரணடைந்தனர். சாலை விபத்தாக பதிவான வழக்கு தற்போது கொலை வழக்காக பதிவு செய்து சேகர்,வரதராஜன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.








