முக்கியச் செய்திகள் உலகம்

ஓராண்டு தலிபான் ஆட்சி-ஆப்கனின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக ஆட்சி போய் தலிபான்களின் வலுக்கட்டாயமான ஆட்சி வந்ததிலிருந்து ஆப்கன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடி உலகின் மிக மோசமானது என்று ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலராவாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மூசா கலா மாவட்ட மருத்துவமனை காலராவால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

காலராவை பரிசோதிப்பதற்கான வசதிகள் கிளினிக்கில் இல்லை என்றாலும், சுமார் 550 நோயாளிகளுக்கு சில நாட்களில் சோதனை செய்யப்பட்டது. சுத்தமான குடிநீர் மற்றும் போதுமான கழிவுநீர் அடிப்படை சுகாதாரத் தேவைகள் இல்லாததால் காலரா ஏற்படுகிறது.
இது மிகவும் கடினமான சூழல் என்று மருத்துவமனை தலைவர் எஹ்சானுல்லா ரோடி, தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் மிகவும் வறுமை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகும் வறட்சி மற்றும் பணவீக்கத்தால் ஆப்கன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

“தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எங்களால் சமையல் எண்ணெயைக் கூட வாங்க முடியவில்லை,” என்று ஒரு பெண் வேதனையுடன் தெரிவித்தார்.

ஊட்டச்சத்து குறைபாடு வார்டில் போதிய வசதிகள் இல்லை. சாப்பிடுவதற்கு பிரெட் கூட கிடைப்பதில்லை என்று நோயாளி ஒருவர் வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மொத்தத்தில் தலிபான் ஆட்சி புரிந்துவரும் ஆப்கானிஸ்தான் கடுமையான

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்சி அருகே தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி

G SaravanaKumar

“இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?

Arivazhagan Chinnasamy

ட்விட்டர் டாபிக்ஸ் தமிழ் மொழியில்…

Arivazhagan Chinnasamy