கடலூர் மாவட்டத்தில் திடீரென பணியிட மாற்றம் வந்ததை அடுத்து காவல் நிலையத்திலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சுகன்யா (30). பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை துணிச்சலாக கைது செய்தவர்.இவர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறந்த அதிகாரியாக செயல்பட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சுகன்யாவிற்கு திடீரென விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் வந்துள்ளது.இதற்கான காரணத்தை உயர் அதிகாரியிடம் கேட்டபோது எந்த வித தகவலும் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த இவர் காவல் நிலையத்திலேயே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை அறிந்த சக போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வரும் சுகன்யா இது குறித்து கூறியதாவது: குட்கா, லாட்டரி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் நேர்மையான நடவடிக்கை மேற்கொண்டேன். எனது பணியிட மாற்றம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மறுப்பு தெரிவித்தும் அதிகாரிகள் என்னை பணியிட மாற்றம் செய்த இடத்திற்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் நேர்மையாக நடந்தால் பணிமாற்றம் நடவடிக்கையா? என்னைப்போல்
பெண் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் இனி இது போல் நடைபெற கூடாது என்றே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என உதவி ஆய்வாளர் சுகன்யா தெரிவித்தார்.
இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினரிடமும் பொதுமக்களிடமும் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ம. ஶ்ரீ மரகதம்







