மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் கைது!

டெல்லியில் போராட்டத்தி்ல் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான…

டெல்லியில் போராட்டத்தி்ல் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர் மற்றும்
வீராங்கனைகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு
முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை கைது
செய்த டெல்லி காவல்துறையை கண்டித்தும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான
பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் எனவும், முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்ட அமைப்பினர் வலியுறுத்தினர். முன்னதாக ரயில் நிலையம் முன்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுப்புகள்
அமைத்து தடுத்து நிறுத்தினர்.

மேலும், தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன்றதால்,
போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட சுமார் 40 பேரை,
போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்தப் போராட்டம்
காரணமாக கோவை ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.