கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் சென்னை மாநகராட்சி 180 வது வார்டில் ஒப்பந்த…

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் சென்னை மாநகராட்சி 180 வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்ப பணியாளராக வேலை செய்து வந்தார்.

இன்று அதிகாலை சிவகாமி திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்ற கார் ஓட்டுநரின்  கட்டுபாட்டை இழந்து சாலை ஓரமாக நின்றிருந்த  சிவகாமி  மீது மோதில் அவர்  சாலை நடுவே விழுந்தார்.

இதையும் படியுங்கள்:காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

அப்போது நீலாங்கரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சிவகாமி மேலே ஏறி இறங்கி நிற்காமல் சென்றது. இதில் சிவகாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் சிவகாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் முகலிவாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அஸ்வந்த் (25) என்பவரை கைது செய்தனர்.

மேலும் தப்பிச்சென்ற லாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.