30 பெண் காவலர்கள் சென்னையில் இருந்து கோடியக்கரை
வரை செல்லும் 1000 கிலோ மீட்டர் பாய்மர படகு பயணத்தை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சென்னை
போர்ட் டிரஸ்டில் நடைபெற்றது. இதில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு , காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர
பாபு, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பெண் காவலர்கள் பங்குபெறும் 1000 கிலோ மீட்டர் பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் தான் மகளிர் காவலர்களை கொண்டு வந்தார்கள். 1000 கி.மீ சாதனை பயணம் செய்யும் நிகழ்ச்சியினை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.
மேலும், உலகத்திலேயே முதல்முறையாக பெண்காவலர்கள் எடுக்கும் முயற்சி இது. வரும்
17 ஆம் தேதி வரை 10 நாட்களில் இப்பயணத்தை முடிக்கத்திட்டமிட்டுள்ளீர்கள்.
இப்பயணத்தை வெற்றிக்கரமாகவும், பாதுகாப்பாகவும் முடிக்க வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கு. பாலமுருகன்







