பொறியியல் படிப்புகளுக்கு பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும். புதிதாக கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படாது என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஜூலை 1 முதல் தொடங்குகின்றது. 13 வகையான தொழில்நுட்பக்கல்லூரிகளில் 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து ஒருவாரத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். பொறியியல் படிப்புகளுக்கு பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும். ஏ ஐ சி டி இ சொல்வதை பின்பற்ற வேண்டியதில்லை. 2010 இல் கலைஞர் ஆட்சிக்காலத்திலேயே பொறியியல் படிப்புகளுக்கு தமிழ் வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கைக்காக முதலமைச்சர் ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நீட் விலக்கு தொடர்பாக நேருக்கு நேராக பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களிலேயே CUET தேர்வு வேண்டாம் என மறுத்திருக்கிறார்கள். குளறுபடிக்கான உதாரணம் தான் cuet தேர்வு என குறிப்பிட்டார்.
மேலும், கூட்டாட்சியில் எதைப்பேச வேண்டுமோ, அதனை தெளிவாக முதலமைச்சர் பேசியுள்ளார். பிரதமரிடம் முதலமைச்சர் கேட்பதில் என்ன தவறு? பாஜகவினர் ஜால்ரா அடிப்பதற்காக கேட்பார்கள். மாநில மொழிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். உண்மையான, ஒட்டுமொத்தமான, ஒருமித்த கொள்கை பாஜகவிடம் இல்லை. அத்துனை மரியாதையையும் பிரதமருக்கு கொடுத்து, கேட்க வேண்டியதை கேட்டுள்ளார் முதலமைச்சர். நமது நிலைப்பாட்டையையும், தேவையையும் பிரதமரிடம் வைத்ததில் தவறில்லை என கூறினார்.