முக்கியச் செய்திகள் விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து இலங்கை அணி 2 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. சிட்டோகிராமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மேட்ச் டிரா ஆனது. இந்நிலையில், தலைநகர் டாக்காவில் கடந்த 23ம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 365 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 506 ரன்கள் எடுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாத்யூஸ் 145 ரன்களும், சண்டிமால் 124 ரன்களும் எடுத்திருந்தனர். 141 ரன்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வங்கதேசம் விளையாடத் தொடங்கியது. அந்த ஆட்டத்தில் 10 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 169 ரன்கள் எடுத்தது. 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 3 ஓவர்களில் எளிதில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் இலங்கை கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிலம்பம் சுற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Halley Karthik

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Web Editor

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி

Vandhana