பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை மீட்டெடுப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்வி கொள்கை என்பது பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் கொள்கையாகும்.
உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும் போது 40% இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. படிப்படியாக அதனை ஆங்கிலேயர்கள் அளித்தனர். இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டவர் இங்கிருந்து கொண்டு போய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டு சேர்த்தனர்.
இங்கு நடைபெறும் இரண்டு நாட்கள் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கு நிறைவு பெற்ற பின்னர் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.








