பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அமையும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவந்தனர். இது தொடர்ந்து இரண்டு கட்சிகளை தொடர்ந்து பாஜகவும் கனிசமான வாக்குகளை பெற்றுவந்தது.
இந்த தேர்தலில் பாஜக தனித்தே களம் கண்டது. இதற்கான முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் நகராட்சிகளில் 1,788 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக 56 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 230 பேரூராட்சியை சேர்ந்த வார்டுகளிலும் வென்று தன்வசப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனிசமான வெற்றிகளை பெற்றுள்ள பாஜகவிற்கு கட்சியின் மூத்த தலைவர்கள், ஆதரவாளரக்ள் தொடர்ந்து பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
https://twitter.com/annamalai_k/status/1496154289688834049
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் அழைத்து பேசிய பிரதமர் மோடி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்காக உழைத்த பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது, “பாஜகவின் வெற்றியும், வாக்கு சதவிகிதம் அதிகரிப்பும் பிரதமர் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பின் பிரதிபலிப்பே” என்று குறிப்பிட்டுள்ளார்.








