கும்பகோணத்தில் பருத்தி விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் 7 ஆயிரத்து 680 ரூபாய்க்கு ஏலம் போனது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் குவிண்டால் பருத்திக்கு 300 ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இருப்பினும், தற்போது பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் டீசல் விலையோடு ஒப்பிடுகையில் பருத்திக்கு கிடைக்கும் விலை குறைவு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.







