முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

விவசாயிகள் நேசிக்கும் வானிலை வழிகாட்டி


ராஜலட்சுமி

வானிலை அறிக்கை என்றாலே அது மக்களுக்கு புரிந்துகொள்ள முடியாது, நிறைய அறிவியல் வார்த்தைகள், குறியீடுகள் இருக்கும் என்பதை மாற்றி, அதை பாமர மக்களுக்கும் ரசிக்கும் விதத்தில் கொண்டு சென்றிருக்கிறார் ‘ஆந்திராவின் வெதர்மேன்’ என்றழைக்கப்படும் பிரனீத்.

நம் விவசாயிகள் வானிலை அறிக்கை மூலமாகத்தான் தங்களின் தினசரி வாழ்க்கையை வரையறை செய்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திராவைச் சேர்ந்த பிரனீத், எளிய யோசனை மூலம் ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிகழ்நேர வானிலை முன்னறிவிப்புகளை வழங்க, ‘ஏபி (ஆந்திர பிரதேஷ்) வெதர்மேன்’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார் சாய் பிரனீத், உள்ளூர் விவசாயிகள் தொடங்கி ஐ.நா வரை பாராட்டப்பட்டுள்ள இவர், வானிலையை புரிந்துகொள்ள ஆர்வம் இருந்தும் அதற்கான வழி என்ன என்று தெரியாமல் தவிக்கும் பலருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆந்திர விவசாயிகளுக்கு அவர்களுக்கு புரியக்கூடிய எளிய தெலுங்கு மொழியில், காணொலி வாயிலாக தினமும் வானிலையை கணித்து கூறி வருகிறார். திருப்பதியில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் சாய் பிரனீத், கல்லூரி காலத்தில் இருந்தே வானிலை சார்ந்த விஷயங்களிலும், அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் மூலமாகவும், வானிலையின் நுணுக்கங்களை ஆழமாக தேடித் தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். அததையே மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று, தொடர்ந்து வானிலை பற்றி சமூக ஊடங்களில் எழுத ஆரம்பித்தார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கும், எளிய மொழி நடையில் இருந்த வானிலை தகவல்கள் பெரும் உதவியாக அமைந்துள்ளது.

“ஒருநாள் சில தெலுங்கு தொலைக்காட்சிகள் மழை பெய்யாது என்று தெரிவிப்பதைக் கண்டேன், வேறு சில தொலைக்காட்சிகள் மழை பெய்யும் என்று கூறினர். ஆனால் இதுபோன்ற குழப்பமான அறிக்கையினால், விவசாயிகள் குழப்பமடைவார்கள் என்று உணர்ந்தேன். மேலும் காலநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் பிரச்னைகளும் உள்ளன. இதை முக்கியமாகத் தடுத்து அவர்களுக்கு வானிலை செய்திகளை எளிய மொழியில் தரவேண்டும் என்பதே என்னுடைய முதன்மை நோக்கம்” என்றார்.

புத்தகங்கள் மற்றும் செய்திகளைப் படிப்பதன் மூலம், பல்வேறு காலநிலை அறிவியல் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி சாய் பிரனீத் கற்றுக் கொண்டார். தினசரி மற்றும் வாராந்திர வானிலை புதுப்பிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், ‘என் வானிலை ஆய்வு’ முறை மூலம், வரவிருக்கும் நாட்கள் / வாரங்களில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை பிரனீத் ஆராய்ந்து, ஆந்திர மக்களுக்கு வழங்கி வருகிறார்.

“நான் வலைப்பதிவிடல் மற்றும் வானிலை முன்னறிவிப்பு வீடியோக்களை உருவாக்குவதை, சமூக வலைத்தள மக்களை தாண்டி விவசாயிகளும் ரசிக்கின்றனர். சில விவசாயிகள் என்னிடம் என்னுடைய வானிலைத் தகவல் எவ்வாறு அவர்களுக்கு உதவியுள்ளது என்று கூறும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியடைகிறார் பிரனீத்.

அது மட்டும் இன்றி தன்னுடைய தொடர் வானிலை ஆய்வு மூலம், பிரனீத் ஆந்திராவின் வெதர்மேன் என்று ஆந்திர அரசே அவரை அங்கீகரித்துள்ளது. மேலும், ஜூன் 2021-ல் வெளியிடப்பட்ட ஐ.நா. வாழ்விட இதழில் இவரை பாராட்டி எழுதப்பட்டடிருந்தது, இவரது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கூறலாம். “இது எனது மிகப்பெரிய சாதனை. என்னால் முடிந்தவரை இதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். முக்கியமாக விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் உதவ வேண்டும்” என்கிறார் பிரனீத். தொடரட்டும் அவரது சேவை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா தொற்று

G SaravanaKumar

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் சுட்டுக் கொலை

G SaravanaKumar

தவிக்கும் தலைநகரம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

Web Editor