மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் உட்பட சிலர் லேசான காயமடைந்தனர். இதுதொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அக்கிராமத்தில் மூன்று விவசாயிகள் நாளை நேரடி நெல் விதைப்பு செய்யவுள்ளதாக அறிவித்தனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்தது. இதனையடுத்து மேல பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி ,காலனி தெரு ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா பிறப்பித்துள்ளார்.
இராமானுஜம்.கி







