ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலி

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார்…

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக அப் பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று இரவு ஆறு யானைகள் கொண்ட கும்பல் ஒன்று பார்வதிபுரம்
அருகே உள்ள விளைநிலத்தில் புகுந்தது. அப்போது அங்கு மிகவும் தாழ்வாக இருக்கும் மின்கம்பம் ஒன்றின் மின் கம்பி மீது யானைகள் உரசி சென்றபோது மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.