ரோகித் சர்மாவை பாராட்டி கவிதை பாடிய ரசிகர் – வீடியோ இணையத்தில் வைரல்!

ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் அவருக்காக கவிதை வாசிக்கும் வீடியோ  இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வலிமையான ஆட்டத்திற்கு முக்கிய பங்காற்றி வருபவர் ரோகித் சர்மா. அவரது தலைமையின் கீழ், இந்திய…

ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் அவருக்காக கவிதை வாசிக்கும் வீடியோ  இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வலிமையான ஆட்டத்திற்கு முக்கிய பங்காற்றி வருபவர் ரோகித் சர்மா. அவரது தலைமையின் கீழ், இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்தித் பாண்டியாவை கேப்டனாக நியமனம் செய்த நிலையில், ரோகித் சர்மா தனது ஐபிஎல் கேப்டன் பதவியை இழந்தார்.இதையும் படியுங்கள்:  “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரோகித் சர்மாவின் கேப்டன்சியைப் பாராட்டி, அவரின் ரசிகர் ஒருவர் கவிதை வாசித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “தன்னலமற்ற கேப்டனை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்களா?” என்ற டெஸ்கிரிப்ஷனுடன் கூடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, கமெண்ட் செக்‌ஷனில் ஸ்மைலி இமோஜியை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.