Skip to content
December 20, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » symbols of parties on condom packets the talk of andhra politics
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆணுறை பாக்கெட்டுகளில் கட்சிகளின் சின்னம் – பேசுபொருளான ஆந்திர அரசியல் கட்சிகளின் பிரச்சாரம்!

ஆந்திராவில் ஆணுறை பாக்கெட்டுகளில் அரசியல் கட்சிகளின் சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் பல்வேறு அரசியல்…

Author Avatar

Jeni

February 23, 20247:55 am andhrapradeshcampaignCondomsElection2024Elections2024logoPoliticsTDPYSRCP

ஆந்திராவில் ஆணுறை பாக்கெட்டுகளில் அரசியல் கட்சிகளின் சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அங்கு தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளன. விதவிதமான யுக்திகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளும், கட்சியினரும் ஈடுபடுவது வழக்கம். சாலையோர உணவகங்களில் தோசை சுட்டுக் கொடுப்பது, டீக்கடைகளில் டீ போட்டுக் கொடுப்பது என மக்களின் கவனம் ஈர்க்கும் பிரச்சாரங்களில் கட்சியினர் ஈடுபடுவதை முந்தைய தேர்தல் களத்தில் கண்டிருப்போம்.

அந்த வகையில் ஆந்திராவில் அரசியல் கட்சிகள் கையாண்டுள்ள பிரச்சார யுக்தி பேசுபொருளாகியுள்ளது. கட்சிகளின் சின்னம் இடம்பெற்றுள்ள ஆணுறை பாக்கெட்டுகளை மக்களுக்கு வழங்கி அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்களுடன் ஆணுறை பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியதுடன், பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

త‌మ పార్టీ ప్ర‌చారం కోసం చివ‌రికి ప్ర‌జ‌ల‌కు కండోమ్‌లు కూడా పంపిణీ చేస్తోంది @JaiTDP. ఇదెక్క‌డి ప్ర‌చార పిచ్చి? నెక్ట్స్ వ‌యాగ్రాలు కూడా పంచుతారేమో? క‌నీసం అక్క‌డితోనైనా ఆగుతారా? లేక‌పోతే మున్ముందు ఇంకా దిగ‌జారుతారా @ncbn @naralokesh @PawanKalyan? #EndofTDP https://t.co/hnflIp8F8I

— YSR Congress Party (@YSRCParty) February 21, 2024

இதையும் படியுங்கள் : “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கட்சி பிரச்சாரத்திற்காக மக்களுக்கு ஆணுறை தருகிறார்கள். இது என்ன வகையான விளம்பர யுக்தி? அடுத்தது என்ன? வயாகரா தரப் போகிறார்களா? இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று தெலுங்கு தேசம் கட்சியை சாடி பதிவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சின்னத்துடன் கூடிய ஆணுறை பாக்கெட்டின் புகைப்படங்களை தெலுங்கு தேசம் கட்சியும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இதுதான் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலுக்குக் கையில் எடுத்துள்ள புதுவகை பிரச்சார யுக்தியா? என்று சாடியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

அமெரிக்கா : விமான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

By Web Editor December 20, 2025

எஸ்.ஐ.ஆர் ; போலி வாக்குகளை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைத்த திமுகவின் கனவில் மண் – எடப்பாடி பழனிசாமி…!

By Web Editor December 19, 2025

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!

By Web Editor December 19, 2025

எஸ்.ஐ.ஆர் ; தமிழ் நாட்டில் மாவட்ட வாரியாக வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்..!

By Web Editor December 19, 2025
#ट्रेंडिंग हैशटैग:andhrapradeshcampaignCondomsElection2024Elections2024logoPoliticsTDPYSRCP

Post navigation

Previous Previous post: மகளிர் பிரீமியர் லீக் 2024 இன்று தொடக்கம் – முதல் போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் மோதல்!
Next Next post: ரோகித் சர்மாவை பாராட்டி கவிதை பாடிய ரசிகர் – வீடியோ இணையத்தில் வைரல்!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading