பெரம்பலூர் அருகே, தனியார் ஹோட்டல் மதுபான பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா்.
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான். இவர் சினிமா படங்களை இயக்கி உள்ளதோடு, பல குறும்படங்கள் எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பிரபல ரவுடி பட்டியலிலும் பெயர் உள்ளது. இவா் 07-06-23 திங்கட்கிழமை அன்று தனது திருமணம் மற்றும் பிறந்த நாளை கொண்டாட, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் பாரில், மது அருந்திக் கொண்டு இருந்தார்.
அப்போது, முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீச்சரிவாளுடன் அறைகூவல் விடுத்து செல்வராஜ் என்ற அப்துல் ரகுமானை சராமரியாக வெட்டி கொன்றதால் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதனால் பாரில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
பின்னா் இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர்
போலீசார், மற்றும் போலீஸ் எஸ்.பி ஷியமளாதேவி, கொலையாளிகள் விட்டுச் சென்ற
தடங்களையும், ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், விசாரணை நடத்தின் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வழக்குக்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, கொலை வழக்கில் நவீன் , அபினாஷ், பிரேமானந்த், நவீன், சர்மா, ரமணி, ஆகிய நபர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் முக்கிய குற்றவாளியான சரவணன் என்பவர் திருச்சியில் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







