இத்தாலி நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு தாய் பாலூட்டியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பெண் உறுப்பினர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து நாடாளுமன்றத்தில் பால் கொடுக்க அனுமதிக்கும் சட்டத்திற்கு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இத்தாலி நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு வயது வரை நாடாளுமன்றத்திற்கு குழந்தைகளை அழைத்து வந்து தாய்ப்பால் கொடுக்க சட்டம் அனுமதிக்கிறது.
இந்நிலையில் கில்டா ஸ்போர்டியெல்லோ என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தனது இரண்டு மாத ஆண் குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர் குழந்தைக்கு தாய்பால் ஊட்டும் போது அனைத்து கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர்.இதன் மூலம் நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய முதல் உறுப்பினர் என்ற பெருமையையும் கில்டா ஸ்போர்டியெல்லோ பெற்றுள்ளார். குழந்தையை தாய் தூக்கி வைத்திருப்பதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தும் வீடியோவை ரோசி என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.






