‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும்  ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக்  இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன்,…

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும்  ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக்  இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் இணையும் படம் தக் லைஃப். இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், படத்தில் ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.