பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், என பன்முக தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
இந்நிலையில் டி. ராஜேந்தர், திடீர் உடல்நல குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டி. ராஜேந்தர், அபாயகட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளன.
ஆனால் மேல் சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிலம்பரசன் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.








