முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தை கண்டு ரசித்த பிரபல நடிகர்!

ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை நேரில் கண்டு ரசித்த கமல்ஹாசன் அவரை பாராட்டியுள்ளார்.

ஒய் ஜி பி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு நாடக உலகில், ஒய்.ஜி.மகேந்திரனின் 61-ம் ஆண்டிற்காக பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேரில் சென்று கண்டுகளித்தார். நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து ஒய்.ஜி. மகேந்திரன் கூறுகையில், நாடகத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். எங்கள் இருவருக்கும் 50 ஆண்டு கால நட்பு இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 20 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார். சாருகேசி நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை கமல் அவர்கள் வெளிப்படுத்தினார். அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால் அவரது ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். சமீபத்தில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று சாருகேசி நாடகத்தை பார்த்து, நாடக குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘கடைசி விவசாயி’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

Arivazhagan Chinnasamy

பசுவை பலியிட்ட புகைப்படத்தை பகிர்ந்தவர் கைது

Web Editor

காட்டு யானையை விரட்ட, அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

Arivazhagan Chinnasamy