குடும்பம் குடும்பமாக வெற்றி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 8 மற்றும் 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாய்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 8 மற்றும் 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாய் வள்ளிமயில், மகன் மருதுபாண்டியன் ஆகியோர் வெற்றிபெற்றனர். 8வது வார்டில் போட்டியிட்ட மருது பாண்டியன் 433 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார், அதேபோல் 13வது வார்டியில் போட்டியிட்ட அவரின் தாயார் வள்ளிமயில் 326 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். விருதுநகரிலும் அதே போன்ற நிகழ்வு நடந்திருக்கிறது.

 

விருதுநகர் நகராட்சியில் 26 மற்றும் 27வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் பேபி மற்றும் மருமகள் சித்தேஸ்வரி போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். 26வது வார்டில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரி 447 வாக்குகளும், 27வது வார்டில் போட்டியிட்ட மாமியார் பேபி 642 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.


மேலும், விருதுநகர் நகராட்சியில் 26 மற்றும் 27வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் பேபி மற்றும் மருமகள் சித்தேஸ்வரி போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். 26வது வார்டில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரி 447 வாக்குகளும், 27வது வார்டில் போட்டியிட்ட மாமியார் பேபி 642 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.