நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பு காரணமாக பிக்பாஸிலிருந்து விலகுவதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸானது கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டுவருகிறது. பிக்பாஸ் 1, 2 என தொடர்ந்து மக்களிடையே பெருத்த ஆதரைப் பெற்றதன் மூலம் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை தாண்டி ஓடிக்கொண்டுள்ளது. தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட்-ஐ தொகுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த தொடரானது தற்போது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகிவருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பு வேலைகள் துரிதமடைந்துள்ளதால் நடிகர் கமல்ஹாசனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் மிக விரைவில் நடக்கவுள்ளதால் படக்குழுவும் வேலைகலை முடுக்கிவிட்டுள்ளது. படப்பிடிப்பு காரணமாக தற்போது கமல்ஹாசனால் பிக்பாஸில் தொடர முடியாத நிலையால் நடிகர் சிம்பு அதனை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் இணையத்தில் பிக்பாஸ் குறித்தும் தங்களது நாயகன் சிம்பு குறித்தும் சிலாகித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.