முக்கியச் செய்திகள்

குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு!

பழனியில் குடும்ப பிரச்னை காரணமாக நபர் ஒருவர் தனது ஆணுறுப்பையும்,
கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார் தங்கும்
விடுதி ஒன்று உள்ளது. இங்கு நாமக்கல்லைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்‌ அறை
எடுத்து நீண்ட நாட்களாக தங்கி, பழனியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில பணியாற்றி
வருகிறார். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக சோகத்தில் இருந்த
சீனிவாசன் நேற்று இரவு மது அருந்திவிட்டு போதையில் தனது ஆணுறுப்பை பிளேடால் அறுத்துக் கொண்டார். மேலும்,  தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பக்கத்து அறையில் தங்கியிருந்த நபர்கள் ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சீனிவாசன் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தற்போது சீனிவாசனுக்கு தீவிர சிக்சிசை அளிக்கப்பட்டு வருகிறது‌. இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா: 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிப்பு!

Halley Karthik

”டிச. 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”- மத்திய அரசு!

Jayapriya

ஜூன் 20ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மூன்று இந்திய வீரர்கள்!

Web Editor