“பேரறிவாளனையே விடுவித்துவிட்டனர்; இனி…” கே.எஸ்.அழகிரி ஓபன் டாக்

நளினியை விடுவிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சேலத்தில் திருமணவிழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே…

நளினியை விடுவிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் திருமணவிழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே விடுவித்துவிட்டனர். நளினியை விடுவிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது” என்று கூறினார்.

மேலும், “கோபியில் உள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகளை உடனே விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அதேபோல தமிழகத்தில் போலீஸ் லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளன. இதில் காவல்துறையினர் கவனம் கொள்ள வேண்டும். அதிகாரிகள் காவல்துறை மரணங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும், “மத்திய அரசு இளைஞர்கள் மீது அக்னிபாத் திட்டத்தை திணித்து வருகின்றனர். ராவணுத்தில் ஆள் சேர்ப்பு விவகாரத்தில் இதுவரையில் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை உருவாக்குகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதுதான் கேள்வி.

4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வாக்குச்சாவடியில் பாஜக பயன்படுத்த இந்த அக்னி வீரர்கள் தயாராக இருப்பார்கள். நாட்டு மக்கள் இதற்கு அமைதியாக இருக்கக் கூடாது இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. இலங்கையில் என்ன நடந்ததோ அதேபோன்ற சூழல்தான் இந்தியாவிலும் ஏற்படும்.

இதைக்கண்டித்து வரும் 27ம் தேதி தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதிமுக விவகாரத்தை பொறுத்த வரை உட்கட்சி தேர்தலில் ஜனநாயம் இருக்க வேண்டும். ஒபிஎஸ், இபிஎஸ் நல்ல நண்பர்கள் இவர்கள் சிக்கலை பேசி தீர்த்திருக்க வேண்டும். அதிமுகவில் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. நடந்த விவகாரம் வருத்தம் அளிக்கின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கானது ஓராண்டில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளனர். திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற ஐந்து ஆண்டு காலம் ஆகும்” என கே.எஸ்.அழகிரி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.