திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கிடங்கின் கதவுகளை உடைத்து பிரேதத்தை எடுத்துச் செல்ல முயன்ற உறவினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி வயலூர் சாலையில் உள்ள வாசன் நகரில் வசித்து வந்தவர் பிரபு. இவர் குடிபோதையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதை அடுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபு இறந்துவிட்டதால் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரேத பரிசோதனைக் கிடங்கின் கதவுகளை உடைத்த பிரபுவின் உறவினர்கள் அவரது சடலத்தை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து, அவர்கள் ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.







