மு.க.அழகிரி அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட தமக்கு அருகதை இல்லை என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், விடியலை நோக்கி ஸ்டாலின் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பில்லா நல்லூர் வார சந்தையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆளும் அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்றார். மேலும் மக்களிடம் திமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றும் திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் முக அழகிரி அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட எனக்கு அருகதை இல்லை என தெரிவித்தார்.







