கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு: சென்னை மாநகராட்சி

பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரிப்பன் மாளிகையில்,…

பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரிப்பன் மாளிகையில், கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தொற்று பாதிப்புடையோர் வீடுகள் தகரம் வைத்து அடைக்கப்படாது எனவும் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மண்டல வாரியான கண்காணிப்பு பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளதாகவும், மீண்டும் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஒரு தெருவில் 10 பேருக்கு மேல் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இருந்தால், அந்த தெரு முழுமையாக அடைக்கப்படும் எனவும், தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும், எனவும் தெரிவித்தார். மேலும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஆதார் அட்டையை காட்டி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் : சென்னை மாநகராட்சி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.