32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

கொரோனா தொற்று பரவல் இருந்த போதிலும் சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது .

சென்ற நிதியாண்டில் இந்திய அரசின் நேரடி வரி வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020 -21 நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் மொத்தம் 9 புள்ளி 45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் நிறுவனங்களின் வரி வருவாய் மூலம் 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயும், தனி நபர் வருமான வரி வருவாய் மூலம் 4 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. முன்கூட்டியே வரி வசூல் அளவு 6.7 சதவீதம் வளர்ச்சிக்கண்டு 4 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுதல் 42 சதவீதம் வளர்ச்சியுடன் 2 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading