முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கொரோனா சினிமா

என்னய்யா சொல்றீங்க? 1963-லேயே ’ஒமிக்ரான்’ பெயரில் படம் வந்துச்சா?

’அன் ஒமிக்ரான் வாரியன்ட்’ என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டிலேயே திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா உலகில் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது. இது வீரியமிக்கது என்றும், பன்மடங்கு பெருகும் சக்தி கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால், பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இங்கும் வேகமாக பரவுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர். ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது, நெட்டிசன்ஸ் ’Contagian’ என்ற திரைப்படத்தை கண்டுபிடித்தனர். உயிரைக் கொல்லும் வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள் குழு போராடும் கதையான அது, கொரோனாவுக்கு தொடர்புடையதாக இருந்ததால், அந்தப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், ஒமிக்ரான் பீதியை கிளப்பும் இந்த நேரத்தில், 1963 ஆம் ஆண்டே ’தி ஓமிக்ரான் வேரியன்ட்’ என்ற பெயரில் இத்தாலியில் திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் ஒரு போஸ்டரை தோண்டி எடுத்துள்ளனர். ’பூமி கல்லறையாக மாறிய நாள்’ என்ற அந்தப் படத்தின் கேப்ஷன்தான் அதிரடி ஷாக் கொடுக்கிறது. இந்த போஸ்டரை, இயக்குநர் ராம் கோபால் வர்மா உட்பட பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

சிலர் இதை டுபாக்கூர் போஸ்டர், போட்டோஷாப் வேலை என்று கூறினாலும் படத்தின் கதையையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இது, வேற்றுக்கிரவாசி ஒருவர், பூமியில் உள்ள மனிதர்களைப் பற்றி அறிந்துகொள்ள, மனித உடலை எடுத்துச் செல்வதான கதையை கொண்டது என்றும் உகோ கிரேகோரெட்டி (Ugo Gregoretti) இயக்கிய இந்தப் படத்தில் ரெனோடா சல்வதோரி, ரோஸ்மேரி டெக்ஸ்டர் உட்பட பலர் நடித்ததாகவும் ஆதாரம் தருகின்றனர் சில நெட்டிசன்ஸ்.

ஆனால், பெக்கி சீட்டில் என்பவர் மூன்று படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ‘70-களின் அறிவியல் புனைகதை போஸ்டர்களில் ‘தி ஓமிக்ரான் மாறுபாடு’ என்ற சொற்றொடரை நான் போட்டோஷாப் செய்தேன் #Omicron” என்று குறிப்பிட்டிருப்பதற்கு, ‘என்ன கோப்ப்ப்பால் இது டுபாக்கூரா?’ என்று ஆச்சர்யமாகக் கேட்டுள்ளனர்.

பல நெட்டிசன்ஸ், இந்த டுபாக்கூர் போஸ்டர்களை நம்பி, 1960 களில் ‘தி ஓமிக்ரான் வேரியன்ட்’ என்ற பெயரில் படம் வந்ததாகவும் ஓமிக்ரான் மாறுபாட்டை அப்போதே கணித்து படம் எடுத்துவிட்டதாகவும் கூறி வருவது வியப்பாகி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

Gayathri Venkatesan

வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!

Halley Karthik

பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதை

Saravana Kumar