ஜப்பானிய நிஞ்சா வீரர்கள் போல உடையணிந்து, பெண் போலீஸ் மீது வாளால் தாக்கியவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் இருக்கிறது செர்போர்க் (Cherbourg). இங்குள்ள Leclerc சூப்பர் மார்க்கெட் அருகே வியாழக்கிழமை மாலை, ஜப்பானிய நிஞ்சா வீரர்கள் போல கருப்பு நிற உடையணிந்து வந்த இளைஞர் ஒருவர், கார் ஒன்றை திருடி ஓட்டி வந்துள்ளார். அது விபத்துக்குள்ளானதை அடுத்து 2 பெண் போலீசார் விசாரிக்க சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது விபத்தை ஏற்படுத்தியவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளால், அந்தப் பெண் போலீசாரை சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவருக்கு முகத்திலும் மற்றொருவருக்கு கன்னத்திலும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ரத்த வெள்ளத் தில் கிடந்த அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த இளைஞர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும் இது தீவிரவாத தாக்குதல் சம்பவமா என்பது பற்றியும் உடனடியாக அறிய முடியவில்லை என்றும் போலீசர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.