கண் பார்வை, ஒரு கை செயலிழப்பு – இந்திய வம்சாவளி எழுத்தாளருக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் தாக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்தது.   பிரபல் எழுத்தாளரானவர் சல்மான் ருஷ்டி (வயது 75).…

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் தாக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்தது.

 

பிரபல் எழுத்தாளரானவர் சல்மான் ருஷ்டி (வயது 75). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு நுழைந்த மர்ம நபர் திடீரென சல்மான் ருஷ்டை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

இந்த தாக்குதலில் சல்மான் படுகாயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் ஒரு கண் பார்வையை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது ஒரு கை செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சல்மானின் புத்தக விற்பனை முகவர் ஆண்ட்ரூ வைலி தெரிவித்துள்ளார். சல்மான் ருஷ்டிக்கு அதிக அளவில் காயங்கள் இருந்ததாகவும், அவரது நரம்புகள் வெட்டப்பட்டதால் கண் பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ருஷ்டி மருத்துவமனையில் உள்ளாரா? இல்லை வீட்டில் இருந்தவாறு சிகிச்சை மேற்கொள்கிறாரா? என்ற விவரத்தை ஆண்ட்ரூ வைலி தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.