கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல,…

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, பெங்களூரிலும், தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு வினாடிக்கு 1177 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது.

எனவே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிகளவு தண்ணீர் செல்வதால், தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, கடந்து மறுகரைக்கு செல்லவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!’

இந்நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 2300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.