சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ3-ம், வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.8-ம் அதிகரித்துள்ளது. கடந்த மே-1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50…

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ3-ம், வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.8-ம் அதிகரித்துள்ளது.

கடந்த மே-1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தியது. இந்த விலை உயர்வு, பேக்கரி கடை, தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தது. இதனால், சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது இது மிகப்பெரிய ஷாக்காக இருந்தது. இந்நிலையில், சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘வரதராஜ பெருமாள் கோவில், பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள்; 72 அடி உயர திருத்தேர் உற்சவம் தொடங்கியது’

அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கும், வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.2499-லிருந்து ரூ.8 அதிகரித்து ரூ.2507 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.