மாமல்லபுரத்தில் ரூ.5 கோடியில் அமையவிருக்கும் கைதத்றி அருங்காட்சியத்திற்கான ஒப்பந்த புள்ளிக்கான அறிவிப்பை கைத்தறித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்திறனை பாதுகாக்கும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி அறிவித்திருந்தார்.
கைத்தறி நெசவில் ஆண்டாண்டு காலமாக உள்ள பாரம்பரியம் மற்றும் கலைநயத்தினை பாதுகாக்கவும், வருங்கால புதிய தலைமுறையினர் நெசவுத் தொழிலில் மேன்மையை அறிந்து கொள்ளவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, கைத்தறி நெசவாளர்களின் திறன், தமிழ்நாட்டிலுள்ள கலைநயமிக்க கைத்தறி ரகங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளவும், கைத்தறி ரகங்களின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் புதிய உத்தியினை பயன்படுத்தி உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் வகையில் கைத்தறி அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த கைத்தறி அருங்காட்சியகத்திற்காக மாமல்லபுரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.5 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அதற்கான பணிகளை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை கைத்தறித்துறை வெளியிட்டுள்ளது.








