முக்கியச் செய்திகள் இந்தியா

மணீஷ் சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர்  சிசோடியாவுக்கு 20ந்தேதி வரை சிறையில் அடைக்க  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக 6-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில், சிசோடியாவின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது, சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிசோடியாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், ஒரு ஜோடி மூக்கு கண்ணாடி, டைரி, பேனா மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை சிசோடியா தன்னுடன் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் கூறும்போது, சிசோடியா தனக்கு தேவையான மருந்துகளை உடன் எடுத்து செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது. தியானம் செய்யும் அறையில் தன்னை வைத்திருக்க வேண்டும் என சிசோடியா தரப்பில் விடுத்த வேண்டுகோளை, சிறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்யும் படியும் நீதிபதிஉத்தரவிட்டு உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

Jayapriya

கடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

Gayathri Venkatesan

பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படும் இபிஎஸ்?

Web Editor