தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அதிவேகத்தில் பரவி வந்த கொரோனா மூன்றாம் அலை கடந்த மாதம் உச்சத்தை தொட்டது.…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் அதிவேகத்தில் பரவி வந்த கொரோனா மூன்றாம் அலை கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ஆலோசனை முடிந்த பின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடரும்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படும், உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
  • தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டி பள்ளிகள் திறக்கவும் பொருட்காட்சிகளை நடத்திக்கொள்ளவும் அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.