ஹிஜாப் விவகாரம்; பிற நாடுகள் தலையிட வேண்டாம் – மத்திய அரசு

ஹிஜாப் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து…

ஹிஜாப் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு நாடுகளும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள் ஹிஜாப் குறித்து கருத்து பதிவிட்டதற்கு  ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, இந்தியாவில் நடக்கும் பிரச்னையை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். முதலில் உங்கள் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பாருங்கள். சமூக செயற்பாட்டாளர் மலாலா பாகிஸ்தானில் தான் தாக்கப்பட்டார். இதனால், அவர் வெளிநாட்டில் தங்கி படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், எங்களது குழந்தைகள் இங்கு தான் உள்ளார்கள். இங்குதான் படிக்கிறார்கள். ஜின்னாவின் பெயரை நாங்கள் ஒரு போதும் உச்சரிக்க மாட்டோம் என காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடு குறித்த வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் சர்ச்சைகளை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை வரவேற்க முடியாது. மத்திய உள்நாட்டு விவகாரத்தில் பிறநாடுகள் தலையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.