கொப்பரை தேங்காய் கொள்முதல் 2 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரியும், கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த கோரியும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் இரண்டு மாத காலத்துக்கு நீட்டிப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி அளித்துள்ளதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
கொப்ரை விலை உயர்த்தி தர வேண்டும் எனவும், தமிழகத்தில் 3 மாதம் நடந்த கொப்பரை கொள்முதல் கடந்த ஜூலை மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன், வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆகியோர் டெல்லி கிரிஷி பவனில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று கொப்பரை கொள்முதலை இரண்டு மாதம் கூடுதலாக நீட்டித்து உத்தரவு பிறப்பிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மேலும் கொப்பரை விலையை 150 ரூபாயாக உயர்த்தி தருவது தொடர்பான கோரிக்கையை பரிசீலித்து, வரும் செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி வந்து தென்னை விவசாயிகளுடன் அமர்ந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்








